254 டாஸ்மாக் பணியாளர்கள் பணியிடை நீக்கம் - தமிழக அரசு அதிரடி
டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிப்பது என்பது மதுபான பிரியர்களுக்கு அதிருப்தியான ஒன்றாகவே இருந்து வருகிறது. அதோடு, காலி பாட்டிலை திரும்ப பெறும் திட்டத்தை தவெக அரசு கொண்டு வந்தது. இதனால், அதற்கும் சேர்த்து கூடுதலாக 20 ரூபாயை மதுப்பிரியர்களிடம் டாஸ்மாக் ஊழியர்கள் வசூலித்து வருகிறார்கள். இதனால், மதுப்பிரியர்கள் டாஸ்மாக் ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்வது தொடர்ந்து நடந்து வருகிறது.
எனவே, காலி மதுபான பாட்டிகளை திரும்பப்பெறும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என டாஸ்மாக் ஊழியர்கள் தொடர்ந்து கூறி வருகிறார்கள். இதையடுத்து, சமீபத்தில் பாட்டிலை திரும்பப்பெருவதற்கான 10 ரூபாயை டாஸ்மாக் நிர்வாகம் பாட்டிலின் MPR விலையிலேயே சேர்த்தது. அதோடு, பாட்டிலை திரும்ப கொடுத்துவிட்டு ரூ.10-ஐ பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. அதோடு, நவம்பர் 1ம் தேதி முதல் பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இது டாஸ்மாக் ஊழியர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. எனவே, காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2 நாட்களாகவே தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் கடைகளை திறக்காமல் 960 டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நேற்று வரை 960 ஊழியர்களுக்கும் மெமோ வழங்கப்பட்டது. மேலும், 160 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும், கடைகளை திறக்காதவர்களுக்கு மீண்டும் மெமோ வழங்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்திருந்தது.
இந்நிலையில், முன்னறிப்பின்றி டாஸ்மாக் கடைகளை மூடி போராட்டம் நடத்திய 1729 ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. இதுவரை 245 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.