தீபமேற்றாத தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை.. நீதிமன்றத்தில் மனு தாக்கல்...
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீப நாளன்று விளக்கேற்ற உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டிருந்த போதிலும், வழக்கமாக ஏற்றப்படும் உச்சி பிள்ளையார் கோவில் அருகேவுள்ள தூணில் மட்டுமே தீபம் ஏற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மலை உச்சியில் தீபமேற்றாத தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி மனுதாரர் ராம ரவிக்குமார் தரப்பில் நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் எம். பஞ்சோலி அடங்கிய அமர்வில் முறையிடப்பட்டது.
கடைசி வரை தூணில் விளக்கேற்றப்படும் எனக் கூறிவிட்டு, நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக அரசு செயல்பட்டதாக மனுதாரர் தரப்பு குற்றம் சாட்டியது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற முடியாததற்கான காரணங்களை குறிப்பிட்டு மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டால், அது குறித்து பரிசீலிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான இந்த வழக்கு மற்றும் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் கவனத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

