செவ்வாய், 18 நவம்பர் 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 18 நவம்பர் 2025 (09:04 IST)

கேப்டன் ஷுப்மன் கில் இரண்டாவது போட்டியில் விளையாடுவது சந்தேகம்… !

கேப்டன் ஷுப்மன் கில் இரண்டாவது போட்டியில் விளையாடுவது சந்தேகம்… !
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டி பள்ளி சிறுவர்களின் போட்டி போல முடிந்தது. இந்த போட்டியில் ஒரு இன்னிங்ஸில் கூட 200 ரன்களுக்கு மேல் எட்டப்படவில்லை. தென்னாப்பிரிக்கா அணி நிர்ணயித்த 120 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் 30 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்றது.

இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் பேட் செய்யும் போது இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் கழுத்து வலிக் காரணமாக ரிட்டடயர்ட் ஹர்ட் ஆனார். அவர் இரண்டாவது இன்னிங்ஸிலும் பேட் செய்யவில்லை. அதுவும் இந்திய அணியின் தோல்விக்குக் காரணமாக அமைந்தது.

இந்நிலையில் நேற்று அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதனால் இரண்டாவது போட்டியில் அவர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் இரண்டாவது போட்டியில் விளையாடுவது சந்தேகம் என சொல்லப்படுகிறது.