மரண தண்டனை குற்றவாளி ஷேக் ஹசீனாவை ஒப்படையுங்கள்.. இந்தியாவுக்கு வங்கதேசம் கடிதம்..!
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அந்நாட்டு தீர்ப்பாயம் மக்களுக்கு எதிரான குற்றங்களுக்காக மரண தண்டனை விதித்துள்ளது. இந்த தண்டனைக்கு பிறகு, அவர் இந்தியாவில் அடைக்கலம் புகுந்துள்ளதாக கூறப்படும் நிலையில், அவரை தங்களிடம் ஒப்படைக்குமாறு வங்கதேசம் முறைப்படி இந்தியாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
இரு நாடுகளுக்குமிடையே உள்ள ஒப்படைப்பு ஒப்பந்தத்தின் கீழ், தப்பியோடிய குற்றவாளிகளை திருப்பி அனுப்ப வேண்டிய கடமை இந்தியாவுக்கு உள்ளதாக வங்கதேச வெளியுறவு அமைச்சகம் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது.
மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களுக்காக தண்டனை பெற்ற ஷேக் ஹசீனா மற்றும் அசாதுஸ்மான் கான் கமல் ஆகிய இருவருக்கும் அடைக்கலம் வழங்குவது நட்பற்ற செயல் என குறிப்பிட்டுள்ள வங்கதேசம், அவர்களை உடனடியாக நாடு கடத்தி தங்களிடம் ஒப்படைக்குமாறு இந்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த மரண தண்டனை தீர்ப்பு ஒருதலைப்பட்சமானது மற்றும் அரசியல் நோக்கம் கொண்டது என்று ஷேக் ஹசீனா தரப்பு விமர்சித்துள்ளது.
இந்தியா, ஹசீனாவை வங்கதேசத்திடம் ஒப்படைப்பது குறித்து விரைவில் முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Mahendran