1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. ashwini-vaishnaw-urges-to-call-chennai-ezhumbur-instead-of-egmore

எக்மோர் வேண்டாம், சென்னை எழும்பூர் என அழையுங்கள்! - மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்

சென்னை எழும்பூர்
ஆங்கிலேயர்கள் வைத்த  எக்மோர்  என்ற பெயரைத் தவிர்த்து, தமிழ் மொழியின் மீது பெருமை கொண்டு  சென்னை எழும்பூர் என்றே அழைக்க வேண்டும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் வலியுறுத்தியுள்ளார்.
 
தமிழ்நாடு பா.ஜ.க. சார்பில் சென்னை தி.நகரில் இந்திய அரசியலமைப்புச் சட்ட நாள் விழா பொதுக்கூட்டம் நேற்று (நவ. 26) நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ரயில்வே மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து விரிவாகப் பேசினார்.
 
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்,  பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழ்நாட்டில் மொத்தம் 77 ரயில் நிலையங்களை உலகத்தரத்திற்கு முழுமையாக மறுகட்டமைப்பு செய்து வருகிறது. குறிப்பாக, சென்னை எழும்பூர் ரயில் நிலையம் மிக அழகாகப் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
 
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் பேசும்போது  சென்னை எக்மோர்  என்று குறிப்பிட்டனர். அப்போது அவர்களிடம்,  குறைந்தபட்சம் தமிழ் மொழியின் மீது பெருமை கொண்டு  சென்னை எழும்பூர்  என்று சொல்லுங்கள்; எக்மோர் என்பது ஆங்கிலேயர்கள் வைத்த பெயர் என்றார்.
 
மேலும், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருவதாகவும், மத்திய அரசு அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் தற்போது செயல்வடிவம் பெற்று வருவதாகவும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். இதேபோல், மதுரை ரயில் நிலையமும் நவீன வசதிகளுடன் அழகாக மாறி வருவதாகவும் அஷ்வினி வைஷ்ணவ் தனது உரையில் தெரிவித்தார்.
About Writer
சு. பாலகிருஷ்ணன்
18 ஆண்டுகள் தமிழ் முன்னணி  நாளிதழ்களின் டிஜிட்டல் செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.  அரசியல், பொழுதுபோக்கு செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.  .... Read More
அடுத்த கட்டுரையில்
அமெரிக்காவை விட்டு வெளிய போங்க!.. இந்தியர்களுக்கு IBM நிறுவனம் எச்சரிக்கை...