1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. adhav arjuna says lot of currption done in dmk govt

நெடுஞ்சாலை துறையில் 2 ஆயிரம் கோடிக்கு பேட்ச் வொர்க்.. திமுக செய்த ஊழல்!.. ஆதவ் அர்ஜுனா அதிர்ச்சி...

adhav arjuna
2026 சட்டமன்ற தேர்தலில் தவெக ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த ஆட்சியில்  திமுகவினர் செய்த ஊழல்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே மூன்று ஃபைல்கள் முதலமைச்சரின் டேபிளில் இருப்பதாக தவெக சொன்னது. அதில் முதல் ஃபைலை திறந்ததால் அன்பில் மகேஷ். கே.என்.நேரு, ஏ.வ.வேலு ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது..

இதில் அன்பில் மகேஷ் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.. அடுத்து கே.என்.நேரு கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஏ.வ.வேலு வகித்து வந்த நெடுஞ்சாலை துறையில் தேர்தல் ஆண்டில் மட்டும் ரூ.2000 கோடி ரூபாய்க்கு பேட்ச் ஒர்க் நடந்துள்ளது.

ரூ.10 லட்சம் ரூபாய்க்கு மேல் பேட்ச் ஒர்க் செய்ய வேண்டும் என்றால் டெண்டர் விட வேண்டும்.. இதனால் திட்ட மதிப்பீட்டை 10 லட்சம் ரூபாய்க்கு உள்ளாகவே காட்டி உண்மையான ஒப்பந்ததாரர்கள் இல்லாமல் போலியான நபர்களைக் கொண்டு ஊழல்கள் செய்துள்ளனர்.. இதேபோல அனைத்து துறைகளிலும் முறைகேடுகள் நடந்துள்ளன// இது குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்’ என அவர் கூறியிருக்கிறார்..
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
டம்மி முதல்வரின் சாதனை!.. மூடர் கூட்ட ஆட்சி!.. உதயநிதி பதிவு!..