1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. netizens comment about supreme court judgement

மாநில அரசின் தோல்வியா?.. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கோட்டைவிட்ட தவெக அரசு!...

temple
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இந்து அமைப்பினர் கூறும் இடத்தில் நாளை தீபம் ஏற்ற வேண்டும் என இன்று நடந்த வழக்கு விசாரணையின் முடிவில் உச்ச நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டிருக்கிறது.

இதையடுத்து, இது மாநில அரசின் தோல்வி. உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து மாநில அரசு சரியான திட்டமிடல் இல்லாமல் குழந்தைத்தனமாக நடந்துகொண்டது. ஒன்று அரசியல்ரீதியான நிலைப்பாடு எடுத்திருக்க வேண்டும். அதாவது எங்களால் ஏற்ற முடியாது என திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கவேண்டும். உச்சநீதிமன்றத்திலேயே பிரச்சனையை முடித்திருக்க வேண்டும்.

அல்லது, உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து நடந்திருக்க வேண்டும். இரண்டும் இல்லாமல் உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றுவோம் எனக்கூறிவிட்டு ‘அறங்காவலர் வரல... அதனால தீபாம் ஏத்த முடியலை’ என மாவட்ட ஆட்சியர் உச்ச நீதிமன்றத்தில் காமடி செய்திருக்கிறார். தற்போது உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவுகளை பிறப்பித்துவிட்டது. நீதிமன்ற அவமதிப்பு எனக்கூறி கலெக்டர், ஐஜி, அறநிலையத்துறை அதிகாரிகள் என அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுவிட்டது.

நாளை தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறிவிட்டது.. கோவில் அறங்காவல் குழுவை கலைத்துவிட்டு, ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கு அந்தப் பொறுப்பை வழங்கிவிட்டது. மாநில அரசின் காவல்துறை மீது நம்பிக்கை இல்லை எனக் கூறி, கோவில் வளாகத்தை பாதுகாக்க மத்திய ரிசர்வ் கால்துறையிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டது.  இப்போது மாநில அரசுக்கு ஒரு அதிகாரமும் இல்லாமல் போய்விட்டது. அதுபோக டிஜிபி, கலக்டர் என அனைவருக்கும் நோட்டீஸ். விஜயின் தவெக அரசு மொத்தமாகக் கரியைப் பூசிக்கொண்டுள்ளது’ என நெட்டிசன்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் விழா.. மின்கம்பியில் பதாகை உரசி 3 இளைஞர்கள் பலி..