1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamil Nadu Government Floats Tender for Advanced Surveillance Drones to Boost Security and Governance

தமிழகத்தில் இனி வானில் இருந்து கண்காணிப்பு! ஆளில்லா விமான நிறுவனம் அமைக்க தமிழக அரசு திட்டம்...

தமிழ்நாடு அரசு
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு, பேரிடர் மேலாண்மை மற்றும் கனிம வளப் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு நவீன தொழில்நுட்பங்களை நிர்வாகத்தில் தீவிரமாகப் புகுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு அரசின் ஆளில்லா வான்வழி வாகன நிறுவனம்  அதிநவீன கண்காணிப்பு ட்ரோன்களைக் கொள்முதல் செய்வதற்கான இ-டெண்டர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
 
இந்தத் திட்டத்தின் மூலம், திருவிழாக்கள் மற்றும் பொதுக்கூட்டங்களில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருள் நடமாட்டத்தை வான்வழியாகக் கண்காணித்துக் குற்றங்களைத் தடுக்கவும் காவல்துறைக்குப் பெரும் உதவியாக இருக்கும். 
 
மேலும், புயல் மற்றும் வெள்ளக் காலங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளை உடனடியாகக் கண்டறிந்து மீட்புப் பணிகளை விரைவுபடுத்தவும் இது பயன்படும். இரவு நேரங்களிலும் தெர்மல் கேமரா உதவியுடன் மணல் மற்றும் கனிம கொள்ளையைத் தடுக்கவும், வனவிலங்குகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும் இந்த ட்ரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
 
சாலைகள், ஏரிகள் தூர்வாருதல் உள்ளிட்ட அரசுத் திட்டங்களின் பணிகளை வானிலிருந்தே துல்லியமாக ஆய்வு செய்வதன் மூலம் ஊழல்கள் தடுக்கப்பட்டு மக்களின் வரிப்பணம் பாதுகாக்கப்படும். அத்துடன், ட்ரோன்களை இயக்குதல் மற்றும் பராமரித்தல் பணிகள் மூலம் தமிழக இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
விமானத்தில் அனுமதி மறுப்பு - ஏர் இந்தியாவுக்கு ரூ.25 லட்சம் அபராதம்...