1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Jio Launches Rs 10,000 Prepaid Recharge Plan With 3-Year Validity And 2.5GB Daily Data

ஜியோ அறிமுகம் செய்யும் ரூ.10,000 ரீசார்ஜ் திட்டம்.. எத்தனை வருடங்கள் வேலிடிட்டி?

Jio 10000 Plan
ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் வசதிக்காக ரூ. 10,000 விலையில் மூன்று ஆண்டுகள் செல்லுபடியாகும் புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் அடிக்கடி ரீசார்ஜ் செய்யும் தொல்லையிலிருந்து வாடிக்கையாளர்கள் விடுபடலாம்.
 
இந்த திட்டத்தின் கீழ் வரம்பற்ற உள்நாட்டு குரல் அழைப்புகள், இலவச நேஷனல் ரோமிங் மற்றும் நாள்தோறும் 2.5 ஜிபி அதிவேக டேட்டா வழங்கப்படுகிறது. மேலும், தகுதியுள்ள பயனர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும், தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் வசதியும் கிடைக்கும். மூன்று ஆண்டுகளுக்கு மொத்தம் 2,737.5 ஜிபி டேட்டா இதில் அடங்கும்.
 
இதுமட்டுமின்றி, ஜியோஹாட்ஸ்டார் மொபைல் + ஹாலிவுட் சந்தா, 12 மாத கன்வா ப்ரோ லைட் மற்றும் 50ஜிபி ஜியோ ஏஐ கிளவுட் சேமிப்பு போன்ற கூடுதல் பலன்களும் இதில் இணைக்கப்பட்டுள்ளன. 
 
தன் பயனர்களுக்கு நீண்ட கால நிம்மதியை வழங்கும் வகையில் அறிமுகமாகியுள்ள இந்தத் திட்டம் நவம்பர் 7 முதல் மைஜியோ செயலி மற்றும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கவுள்ளது. இதனுடன் அவசரத் தேவைகளுக்காக ரூ. 15 விலையில் 1ஜிபி டேட்டா வழங்கும் புதிய டேட்டா பேக்கையும் ஜியோ அறிமுகப்படுத்தியுள்ளது.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை முடிந்தது.. டிரம்ப் அறிவிப்பு.. தேர்தல் தோல்வியால் மனமாற்றமா?