1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. vijay discussion with police officials on friends of police

தமிழகத்தில் மீண்டும் போலீஸ் நண்பர்கள் குழு!.. முதல்வர் விஜய் ஆலோசனை

friends of police
தமிழகத்தில் பல வருடங்களாகவே போலீஸ் நண்பர்கள் குழு செயல்பட்டு வந்தது. ஏனெனில், பொதுமக்களுக்கு தேவையான காவல்துறை அதிகாரிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் தமிழக காவல்துறை போலீஸ் நண்பர்கள் குழுவை பயன்படுத்தி வந்தது. ஆனால், பல சமயங்களில் போலீஸ் நண்பர்கள் குழுவில் இருப்பவர்கள் போலீசை விட பொதுமக்களிடம் அராஜகமாக நடந்துகொண்டனர்.

சாத்தான்குளத்தில் உயர் போலீஸ் அதிகாரிகளின் உத்தரவில் அப்பா, மகனை லாக்கப்பில் வைத்து போலீசார் அடித்தபோது அவர்களுடன் சேர்ந்து போலீஸ் நண்பர்கள் குழுவில் இருந்தவர்களும் அவர்களை கடுமையாக தாக்கியதாக சொல்லப்பட்டது. இதனையடுத்து, தமிழக டிஜிபி போலீஸ் நண்பர்கள் குழுவை கலைத்தார்.

இந்நிலையில்தான், தற்போது சட்டம் - ஒழுங்கு பிரச்சனையை சமாளிக்க, போலீஸ் நண்பர்கள் குழுவை மீண்டும் அமைப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார். போலீசாரை பணிக்கு எடுத்து பயிற்சி வழங்க ஒரு வருடத்திற்கும் மேல் தேவைப்படும் என்பதால், தற்போதுள்ள நிலைமையை சமாளிப்பதற்கு போலீஸ் நண்பர்கள் குழுவை மீண்டும் உருவாக்குவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் அதிரடி விலை குறைப்பு - ஹீரோ நிறுவனம் முடிவு...