அமெரிக்கா மீண்டும் தவறிழைத்தால், எங்கள் படைகள் தக்க பதிலடி கொடுக்கும்.. ஈரான் எச்சரிக்கை..
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போர் அச்சுறுத்தல்களையும், சமாதான பேச்சுவார்த்தைகளையும் மாறி மாறி முன்வைத்து வரும் சூழலில் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.
ஈரான் முன்வைக்கும் 7 நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்றால் மட்டுமே ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை சாத்தியமாகும் என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்கா மீண்டும் தவறிழைத்தால், ஈரானிய ஆயுதப் படைகள் தக்க பதிலடி கொடுக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி இறுதியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அலி கொமேனி கொல்லப்பட்டதை அடுத்து மத்திய கிழக்கில் போர் வெடித்தது. ஈரானின் பதிலடியால் ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.
ஜூன் மாதம் இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தான போதிலும், அடுத்த மாதமே அது ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையில், சவுதி அரேபியா மற்றும் துருக்கி நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்க, புதிய ஆக்கிரமிப்புத் தாக்குதல்களைத் தவிர்ப்பது குறித்து ட்ரம்ப் ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

