வியாழன், 6 நவம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth K
Last Modified: வெள்ளி, 20 ஜூன் 2025 (12:46 IST)

போரை நிறுத்த சொல்லி இந்தியாவிடம் கெஞ்சினோம்!? - உண்மையை கக்கிய பாகிஸ்தான் துணை பிரதமர்!

Pak deputy PM

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரின்போது போர் நிறுத்த கோரி தாங்கள் முதலில் இந்தியாவை அணுகியதாக பாகிஸ்தான் துணை பிரதமர் இஷாக் தார் ஒப்புக் கொண்டுள்ளார்.

 

இதுகுறித்து ஒரு செய்தி நேர்க்காணலில் பேசிய அவர் “ பாகிஸ்தான் தனது திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பே இந்தியா நூர் கான் மற்றும் ஷோர்கோட் விமானத் தளங்களை தாக்கி விட்டது. இந்தியா மீண்டும் அதிகாலை 2.30 மணிக்கு ஏவுகணை தாக்குதல் நடத்தியது. 45 நிமிடங்களுக்குள் சவுதி இளவரசர் என்னை அழைத்தார்.

 

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவுடன் நான் பேசியது தெரிய வந்ததாக அவர் கூறினார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம், இந்தியா போரை நிறுத்தினால் பாகிஸ்தானும் நிறுத்த தயாராக இருக்கிறது என்று பேச தனக்கு அதிகாரம் உள்ளதா என்று கேட்டார். தாராளமாக நீங்கள் பேசுங்கள் என்றேன். அதன்பின்னர் 25 நிமிடங்கள் கழித்து அவர் என்னை அழைத்தார். உங்களுக்காக நீங்கள் சொன்னதை ஜெய்சங்கரிடம் கூறினேன்” என கூறியுள்ளார்.

 

இதன்மூலம் இந்தியாவின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் மறைமுகமாக போர் நிறுத்தத்திற்கு இந்தியாவிடம் மன்றாடியது தெரிய வந்துள்ளது.

 

Edit by Prasanth.K