1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. testosterone counts are gonig down for men

ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் கடுமையாக சரிவு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!..

testosterone
50 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்தவர்கள் மிகவும் ஆரோக்கியமாக இருந்தார்கள். சத்தான பச்சை காய்கறிகள், சுத்தமான குடிநீர், சத்தான உணவுகள் மற்றும் மாசுபடாத காற்று ஆகியவை முக்கிய காரணங்களாக இருந்தன. ஆனால் நாகரீகம் வளர்ந்து விட்ட நிலையில் வேகமான உலகத்தில் எல்லாமே வேகமாக மாறிவிட்டதோடு மனிதர்கள் சாப்பிடும் உணவிலும் விஷம் கலந்து விட்டது. விளையும் காய்கறிகளில் அதிகப்படியான பூச்சிக்கொல்லி மருந்துகள் அடிக்கப்படுகிறது.. எனவே காய்கறிகளில் தற்போது பாதி சத்துக்கள் மட்டுமே கிடைக்கின்றன..

ஒருபக்கம் இளைஞர்கள் சத்தான உணவுகளை விட்டு விட்டு Fast Food கலாச்சாரத்திற்கு மாறிவிட்டார்கள். இதனால் அவர்களின் ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில்தான், இனப்பெருக்கத்திற்கு உதவும் டெஸ்டோஸ்டிரோன் ஆண்களின் உடலில் அதிக அளவில் சரிவை சந்தித்திருப்பதாக லண்டனில் நடைபெற்ற ஐரோப்பிய மனித இனப்பெருக்கம் மற்றும் கருவியல் சங்கத்தின் கூட்டத்தில் (ESHRE) சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வில் தெரிய வந்திருக்கிறது..

1972ம் வருடம் முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் ஆண்களின் சராசரி டெஸ்டோஸ்டிரோன் அளவு 54 சதவீதம் குறைந்துள்ளதாக அந்த ஆய்வு கூறுகிறது.
உடல் பருமன், நீரிழிவு நோய், சுற்றுச்சூழலில் உள்ள ரசாயனங்களால் இந்த பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், ஆண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தில் ஏற்பட்டுள்ள பெரிய நெருக்கடி இது எனவும் விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள்.