இந்தியாவில் குண்டு வெடித்த அடுத்த நாளே பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்.. 12 பேர் பலி..!
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் மாவட்ட நீதிமன்ற வளாகம் அருகே இன்று பிற்பகல் ஒரு சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் குறைந்தபட்சம் 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பலியானவர்களில் பெரும்பாலானோர் வழக்கறிஞர்கள் என்று கூறப்படுகிறது.
நிறுத்தப்பட்டிருந்த காரில் வெடிப்பு நிகழ்ந்ததால், இதை இந்த குண்டுவெடிப்பு நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, தெற்கு வசீரிஸ்தானில் TTP பயங்கரவாதிகள் கேடட் கல்லூரியில் நடத்தவிருந்த தாக்குதலை பாதுகாப்பு படைகள் முறியடித்தன.
பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிப், இது ஆப்கானிஸ்தானால் தூண்டப்பட்ட தாக்குதல் என குற்றம் சாட்டி, பாகிஸ்தான் இப்போது போர் நிலையில் இருப்பதாக அறிவித்துள்ளார்.
டெல்லியில் செங்கோட்டை அருகே கார் குண்டுவெடிப்பு நடந்த ஒரு நாள் கழித்து, இந்த சம்பவம் இஸ்லாமாபாத்தில் நிகழ்ந்துள்ளது கவனிக்கத்தக்கது.
Edited by Siva