குண்டு வெடிப்புக்கு பின் 3 முறை போன் செய்தேன்.. பதிலில்லை: 26 வயது மகனை இழந்த தந்தை உருக்கம்.!
டெல்லி செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்பில் உத்தர பிரதேசத்தின் ஷ்ரவஸ்தி மாவட்டத்தை சேர்ந்த தினேஷ் மிஸ்ரா உயிரிழந்தார். டெல்லியில் திருமண அழைப்பிதழ் கடையில் வேலை செய்து வந்த தினேஷ், குண்டுவெடிப்பு நேரத்தில் அவரது தந்தையான பூரே மிஸ்ராவால் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை.
குண்டுவெடிப்பு செய்தி வெளியானபோது பூரே மிஸ்ரா மகனை அழைக்க, தினேஷின் தொலைபேசி அணைக்கப்பட்டிருந்தது. பின்னர், தனது மூத்த மகன் மூலம் தினேஷ் பலியான செய்தியை அவர் அறிந்தார்.
தினேஷ் தனது எட்டு வயது மகனுடன் டெல்லியில் வசித்து வந்தார். அவரது மனைவி ரீனா, தாயார் சாவித்திரி மற்றும் இரண்டு மகள்கள் ஷ்ரவஸ்தியில் வசித்து வருகின்றனர். "எல்லாவற்றையும் இழந்துவிட்டோம்" என்று அவர்கள் கதறினர்.
இந்த கொடூர தாக்குதலில் மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பங்கஜ் சைனி (டாக்சி ஓட்டுநர்), அமர் கடாரியா (மருந்துக் கடைக்காரர்), நோமன், அமன், அசோக் குப்தா மற்றும் லோகேஷ் குப்தா போன்றோர் அடங்குவர். பலியானவர்கள் அனைவரும் வேலை நிமித்தமாக அப்பகுதியில் இருந்தவர்கள்.
லோக் நாயக் மருத்துவமனையில் உடல்கள் ஒப்படைக்கப்பட்டபோது, உறவினர்களின் அழுகுரலால் சோகம் சூழ்ந்தது.
edited by Mahendran