வெறும் பென்சிலை வைத்து சுவரில் ஓட்டை போட்ட நபர்.. சுவர் அவ்வளவு பலவீனமா?
நொய்டாவில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பின் சுவரில், மர பென்சிலால் சுத்தியலால் அடித்தபோது எளிதில் ஓட்டை விழுவதை காட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம், டெல்லி-என்சிஆர் பகுதியில் உள்ள விலையுயர்ந்த கட்டிடங்களின் கட்டுமான தரம் குறித்து கவலையை எழுப்பியுள்ளது.
'kabeer.unfiltered' என்ற இன்ஸ்டாகிராம் பயனர், தனது "பிரீமியம்" பிளாட்டில், டிரில்லுக்கு பதிலாக பென்சிலை பயன்படுத்தி சுவரில் துளையிட முடிந்தது என்றும், இது கட்டுமானத்தின் பலவீனத்தை காட்டுவதாகவும் கூறினார்.
இந்த வீடியோவைக் கண்டு பலர் அதிர்ச்சி அடைந்தாலும், சிலர் இதற்கு விளக்கமளித்தனர். இந்த சுவர்கள் AAC (Autoclaved Aerated Concrete) பிளாக்குகள் என்றும், இவை இலகுவானவை, சுமையை தாங்காதவை என்றும், நிலநடுக்கத்தின்போது பாதுகாப்பை கருதி உயர் கட்டிடங்களில் பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தனர்.
இருப்பினும், இந்த வீடியோவின் உண்மைத்தன்மை மற்றும் சுவரின் பலவீனத்திற்கான சரியான காரணம் ஆகியவை இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
Edited by Mahendran