இந்தியாவுக்கு போட்டியாக தூது குழுவை அனுப்பும் பாகிஸ்தான்… பிலாவல் பூட்டோ தான் தலைமை!
ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கம் அளிக்கவும், பாகிஸ்தான் தொடர்ந்து தீவிரவாதத்திற்கு ஆதரவளித்து வருவது குறித்து கூறவும், உலக நாடுகளுக்கு இந்தியாவின் எம்பிக்கள் பயணம் செய்ய உள்ளனர். இதில், தமிழக எம்பி கனிமொழி உள்பட பலர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தானும் தனது தூது குழுவை வெளிநாடுகளுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாகவும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ தலைமையில் ஒரு குழுவை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் அமைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவலை, பிலாவல் பூட்டோ தனது எக்ஸ் பதிவில் உறுதி செய்துள்ளார். "பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் என்னை அழைத்து, சர்வதேச அரங்கில் அமைதிக்கான முயற்சிகள் நிலைநாட்ட கேட்டுக் கொண்டார்" என்றும், "இந்த பொறுப்பை ஏற்றுக் கொள்வதில் எனக்கு மகிழ்ச்சி" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Edited by Siva