1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 28 ஜூன் 2025 (10:11 IST)

அகதிகள் பெயரில் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர்கள்.. 36 பேர் கைது.. அமைச்சர் கடும் எச்சரிக்கை..!

Arrest
அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் என்ற பெயரில் மலேசியாவிற்குள் நுழைந்த 36 வங்கதேச நாட்டவர்கள், ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மலேசிய உள்துறை அமைச்சர் சைபுதீன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
கைது செய்யப்பட்ட வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் தீவிரவாத சித்தாந்தங்களை நாட்டிற்குள் பரப்ப முயன்றதாக மலேசிய உள்துறை அமைச்சர் சைபுதீன் கூறியுள்ளார். மேலும், பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டியதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
 
"அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் என்ற பெயரில், வெளிநாட்டுத் தீவிரவாதிகளுக்கு மலேசியா ஒருபோதும் புகலிடமாக இருக்காது," என்று அமைச்சர் சைபுதீன் கண்டிப்புடன் கூறியுள்ளார்.
 
ஏற்கனவே இந்தியாவில் வங்கதேசத்தினர் ஊடுருவி பல்வேறு பயங்கரவாத செயல்களைச் செய்து கொண்டிருப்பதாக கூறப்படும் நிலையில், தற்போது மலேசியாவிலும் வங்கதேசத்தினர் புகுந்து ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவு திரட்டி வருவது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
 
Edited by Mahendran