1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 18 ஏப்ரல் 2025 (12:03 IST)

கூடாரத்தை கொழுத்திய இஸ்ரேல்! உடல் கருகி பலியான 23 பாலஸ்தீன மக்கள்! - தொடரும் சோகம்!

Gaza war

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் தொடர்ந்து வரும் நிலையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீன மக்கள் கூடாரத்தோடு எரிந்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வரும் நிலையில் சமீபத்தில் அமெரிக்காவின் தலையீட்டின் பேரில் தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டது. ஒப்பந்தப்படி இரு தரப்பிலும் பணையக் கைதிகள், சிறைக்கைதிகள் விடுவிக்கப்பட்டு வந்த நிலையில் ஹமாஸ் பிணைக்கைதிகளை ஒப்படைப்பதில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மீண்டும் இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது.

 

இதனால் போர் நிறுத்தத்தை நம்பி காசாவுக்கு சென்ற மக்கள் பலர் பலியாகி வருகின்றனர். இஸ்ரேலிய பிணைக் கைதிகள் அனைவரையும் விடுவிப்பதாக சமீபத்தில் ஹமாஸ் தெரிவித்திருந்த நிலையிலும் இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்து வருகிறது.

 

அவ்வாறாக சமீபத்தில் தெற்கில் கான் யூனிஸில் இஸ்ரேல் ஏவுகணைகள வீசி தாக்குதல் நடத்தியது. இதில் அகதிகளாக மக்கள் தங்கியிருந்த கூடாரம் பற்றி எரிந்து 23 பாலஸ்தீன மக்கள் உடல் கருகி பரிதாபமாக பலியாகியுள்ளனர். இதில் 10 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

 

காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இதுவரை 51 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

 

Edit by Prasanth.K