வெள்ளி, 17 அக்டோபர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth K
Last Modified: வியாழன், 16 அக்டோபர் 2025 (08:48 IST)

மலேசியாவில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா? 6 ஆயிரம் மாணவர்கள் பாதிப்பு!

மலேசியாவில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா? 6 ஆயிரம் மாணவர்கள் பாதிப்பு!

மலேசியாவில் கொரோனா மற்றும் இன்புளூயன்சா காய்ச்சலால் ஆயிரக்கணக்கில் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

2019ம் ஆண்டில் உலகை தாக்கிய கொரோனா வைரஸ் தற்போது ஓய்ந்து விட்டாலும், குளிர் காலம் தொடங்கும்போது அதன் வேரியண்ட் எங்கேயாவது உண்டாகி அச்சுறுத்தல் அளிக்கிறது. அவ்வாறாக கடந்த முறை இந்தியாவில் கண்டறியப்பட்ட எக்ஸ்.எஃப்.ஜி வகை கொரோனா தற்போது மலேசியாவில் அதிகளவில் பரவி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 

இதனால் ஏற்பட்ட இன்புளூயன்சா காய்ச்சல் போன்றவற்றால் ஒரே வாரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலும் பள்ளி மாணவர்களே இந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதால் பாதிப்பு அதிகம் உள்ள பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டு, மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது.

 

மேலும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மலேசியாவில் வரும் நவம்பர் மாதத்தில் 4 லட்சம் மாணவர்கள் பள்ளி இறுதித்தேர்வு எழுத உள்ளனர். இந்நிலையில் இந்த பாதிப்பு ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை அளித்துள்ளது.

 

Edit by Prasanth.K