திங்கள், 29 செப்டம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 5 செப்டம்பர் 2025 (14:33 IST)

பாகிஸ்தானின் முக்கிய ரயில்வே திட்டத்திலிருந்து வெளியேறியது சீனா.. இந்தியா காரணமா?

பாகிஸ்தானின் முக்கிய ரயில்வே திட்டத்திலிருந்து வெளியேறியது சீனா.. இந்தியா காரணமா?
பாகிஸ்தானின் மோசமான நிதிநிலை காரணமாக, முக்கியமான கராச்சி-பெஷாவர் ரயில்வே திட்டத்திற்கு நிதியளிப்பதிலிருந்து சீனா பின்வாங்கியுள்ளது. இதற்கு சமீபத்தில் சீனாவுடன் இந்தியா நெருக்கம் காட்டியதே காரணம் என கூறப்படுகிறது.
 
பாகிஸ்தான் ரயில்வே திட்டத்திற்கு நிதி உதவி செய்வதாக சீனா உறுதியளித்திருந்தது. இந்தத் திட்டம், சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் (CPEC) ஒரு முக்கியப் பகுதியாகும். இதன் மதிப்பு சுமார் $2 பில்லியன் என்று கூறப்படுகிறது.
 
பாகிஸ்தானின் மோசமான நிதி நிலைமையும், அது வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்துவதில் உள்ள சிக்கல்களும் இந்த முடிவுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகின்றன.
 
சீனா, பாகிஸ்தானின் கடன் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு இந்த திட்டத்திலிருந்து வெளியேறியதாக தெரிகிறது.
 
சீனாவின் இந்த திடீர் முடிவால், பாகிஸ்தான் இந்த திட்டத்திற்கு நிதி உதவி பெறுவதற்காக ஆசிய வளர்ச்சி வங்கியை நாடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
Edited by Mahendran