1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth K
Last Modified: திங்கள், 7 ஜூலை 2025 (11:57 IST)

சகோதரனுக்கு சகோதரியுடன் திருமணம்! இரட்டை குழந்தை பிறந்தால் இப்படி ஒரு வழக்கமா? - வைரலாகும் வீடியோ!

Twins Marriage

தாய்லாந்தில் பிறந்த இரட்டை குழந்தைகளான சகோதரன், சகோதரிக்கு 4 வயதிலேயே திருமணம் செய்து வைத்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

 

உலகம் முழுவதும் பல்வேறு கலாச்சாரத்தை சேர்ந்த மக்கள் வாழ்ந்து வரும் நிலையில் அவர்களது திருமண பழக்க வழக்கங்களும் ஒவ்வொரு விதமானதாய் அமைந்திருக்கின்றன. சமீபத்தில் தாய்லாந்தை சேர்ந்த 4 வயது இரட்டை குழந்தைகளான ஒரு சகோதரன், சகோதரிக்கு தாய்லாந்து மரபான முறைப்படி திருமணம் செய்து வைக்கப்பட்டது.

 

தாய்லாந்தில் உள்ள புத்த மத வழக்கத்தின்படி, இரட்டைக் குழந்தைகள் ஆண் - பெண்ணாக பிறந்தால் அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்து விடுவார்களாம். அவர்களது நம்பிக்கையின்படி, முன் ஜென்மத்தில் காதலர்களாக இருந்தவர்கள்தான் இந்த ஜென்மத்தில் இரட்டை குழந்தைகளாக பிறப்பார்கள் என்பதால் அவர்களை சேர்த்து வைத்துவிட வேண்டும் என்பதை மரபாகக் கொண்டிருக்கிறார்களாம். ஆனால் இது ஒரு மரபு சார்ந்த திருமணம் மட்டும்தான் என்றும், அவர்கள் வளர்ந்ததும் தாங்கள் விரும்பியவர்களை திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

 

தற்போது இந்த தாய்லாந்து வீடியோ வைரலாகியுள்ள நிலையில் புதிய விதத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் குழந்தை திருமணம் தடை செய்யப்பட்டுள்ளது போல தாய்லாந்தில் செய்யப்படாமல் இருப்பதும், அந்த குழந்தைகள் விவரம் தெரிவதற்கு முன்பே அவர்கள் விருப்பமின்றி இவ்வாறாக திருமணம் செய்து வைக்கப்படுவதும் சரியல்ல என்று பலர் கருத்துகளை கூறி வருகின்றனர். 

 

Edit by Prasanth.K