AI - யால் 100 கோடி பேர் இறந்து போவாங்க!.. பீதி கிளப்பும் பில் கேட்ஸ்..
சமீபகாலமாகவே சாப்ட்வேர் துறையில் AI என அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அபரீதமாக இருக்கிறது. AI இல்லாததை இருப்பது போலவும் காட்டுகிறது. AI-யில் உருவாக்கப்பட்ட பல வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் வலம் வரத்துவங்கி விட்டது.
எது உண்மை, எது பொய் என கண்டறிய முடியாத நிலை வந்திருக்கிறது. ஒருபக்கம் AI-யின் அசுர வளர்ச்சி மனிதகுலத்தை பாதிக்கும் AI ரோபோக்கள் மனிதர்களுக்கு எதிராக திரும்பும்.. ஒரு கட்டத்தில் மனிதர்களுக்கு கட்டுப்படாமல் செயல்படும் என சாஃப்ட்வேர் வல்லுநர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகிறார்கள்..
இந்நிலையில்தான், இதுபற்றி கருத்து தெரிவித்த பில்கேட்ஸ் 100 கோடி உயிரிழப்புகளை ஏற்படுத்தும் அளவுக்கு AI தொழில்நுட்பம் சக்தி வாய்ந்தது என எச்சரித்திருக்கிறார். AI தொழில்நுட்பத்தை கட்டுப்படுத்துவதிலும், கண்காணிப்பதிலும் அரசுகள் கூடுதலாக பங்காற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியிருக்கிறார். தீய நோக்கம் உடையவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு(AI) ஒரு மிக வலிமையான ஆயுதம் எனவும் அவர் எச்சரித்திருக்கிறார்.