1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
  4. How to make Karpooravalli Leaves Rasam...!

ஆரோக்கியம் தரும் கற்பூரவள்ளி ரசம் செய்ய...!

கற்பூரவள்ளி ரசம்
தேவையானவை: 
 
கற்பூரவள்ளி இலை - 5
சுக்கு - ஒரு சிறிய துண்டு
மிளகு - அரை டீஸ்பூன்
கடுகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்
துவரம்பருப்பு - 2 டீஸ்பூன்
தக்காளி சாறு - 2 கப்
நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: 
 
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் ஓமவள்ளி இலை, சுக்கு, துவரம்பருப்பு, மிளகு ஆகியவற்றை லேசாக வதக்கி, விழுதாக  அரைக்கவும். இதை தக்காளி சாறுடன் கலந்து தேவையான தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைக்கவும். கீழே இறக்கி  நெய்யில் கடுகு, சீரகம் தாளித்துச் சேர்க்கவும். சுவையான ஆரோக்கியம் தரும் கற்பூரவள்ளி ரசம் தயார்.
அடுத்த கட்டுரையில்
எந்தெந்த காய்கறிகளை பச்சையாக சாப்பிடவேண்டும் தெரியுமா...?