வி.எஸ்.பாபுவின் உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி...
2026 சட்டமன்றத் தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டவர் வி.எஸ்.பாபு. ஆச்சர்யம் கொடுக்கும் விதமாக அந்த தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட திமுக தலைவர் மற்றும் தமிழக முன்னாள் முதல்வர் முக ஸ்டாலினை வி.எஸ் பாபு தோற்கடித்து வெற்றி பெற்றார்
.
மேலும், கடந்த செப்டம்பர் 9ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் வி.எஸ்.பாபு அனுமதிக்கப்பட்டார். கடந்த 70 நாட்களுக்கு மேல் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று மதியம் 2.24 மணி அளவில் மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு வி.எஸ்.பாபு காலமானார்.
தற்போது பெரம்பூர் திருநாவுக்கரசர் தெருவில் உள்ள வீட்டில் வி.எஸ்.பாபுவின் உடல் வைக்கப்பட்டுள்ளது. அங்கு தவெக நிர்வாகிகள், எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் என பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில், முதல்வர் ஜோசப் விஜய் நேரில் சென்று வி.எஸ்.பாபுவுக்கு அஞ்சலி செலுத்தினார். விஜயை பார்த்ததும் பாபுவின் குடும்பத்தினர் கண்ணீர் விட்டனர். அவர்களுக்கு விஜய் ஆறுதல் கூறினார்.