டிசம்பர் 16-ஆம் தேதி தாய்நாடு திரும்ப ஷேக் ஹசீனா திட்டம்.. கைது செய்யப்படுவாரா?
பதவி நீக்கம் செய்யப்பட்ட வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, 1971 விடுதலை போர் வெற்றி நாளான வரும் டிசம்பர் 16-ஆம் தேதி தாய்நாடு திரும்ப திட்டமிட்டுள்ளதாக அவரது செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
2024 ஆகஸ்ட் மாதம் மாணவர் போராட்டத்தை தொடர்ந்து இந்தியாவில் தஞ்சமடைந்த அவர், டெல்லியில் இருந்து டாக்கா செல்ல அரசு விமானமான 'பிமான் வங்கதேச ஏர்லைன்ஸ்' மூலம் பயண ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இருப்பினும், வங்கதேச அரசு இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. போராட்டக்காரர்கள் மீதான அடக்குமுறை வழக்கில் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், அவர் நாடு திரும்பினால் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என வங்கதேச அமைச்சர் எச்சரித்துள்ளார்.
மேலும், நாடுகடத்தல் ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவிலிருந்து அவரை ஒப்படைக்க வங்கதேசம் கோரி வருகிறது.

