1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. chief minister vijay plans in trichy is cancelled

வி.எஸ்.பாபு மறைவு!.. முதல்வரின் திருச்சி பயணம் ரத்து...

vijay babu
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் நாளை திருச்சி சென்று புத்தூரில் உள்ள மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்ட 600 படுக்கைகள் கொண்ட புதிய கட்டிடத்தை திறந்து வைக்கவிருந்தார்.

மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கவிருந்தார். எனவே இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில்தான் கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ வி.எஸ் பாபு இன்று மதியம் 2:30 மணியளவில் காலமானார்.

இதையடுத்து திருச்சியில் நாளை நடைபெறவிருந்த முதல்வர் விஜயின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் விரைவில் முதல்வர் விஜய் நேரில் சென்று வி.எஸ் பாபு உடலுக்கு அஞ்சலி செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் முக ஸ்டாலினுக்கு எதிராக போட்டியிட்டு ஸ்டாலினை வி.எஸ்.பாபு தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கங்கள் திடீர் போராட்டம்.. ரூ.300 கட்டணம் ரூ.800 வரை உயர்ந்ததால் அதிர்ச்சி....