1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. Coimbatore's 17-Year-Old Maya Rajeswaran Breaks Sania Mirza's Record with Historic Dual Wins in Lagos

சானியா மிர்சா சாதனையை முறியடித்த கோவை 17 வயது இளம் பெண்.. டென்னிஸ் உலகில் ஒரு மகுடம்...

மாயா ராஜேஸ்வரன்
கோவையை சேர்ந்த 17 வயது இளம் டென்னிஸ் வீராங்கனை மாயா ராஜேஸ்வரன் ரேவதி, நைஜீரியாவில் நடைபெற்ற ITF W35 லாகோஸ் தொடரில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் என இரண்டு பிரிவுகளிலும் சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். இறுதிப்போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை செலியா செர்வினோ ரூயிஸை வீழ்த்தி அவர் இந்த வெற்றியைப் பெற்றுள்ளார்.
 
இதன் மூலம், டென்னிஸ் ஜாம்பவான் சானியா மிர்சா தனது 17 வயது 10 மாதங்களில் இதே நிலை தொடரில் பட்டம் வென்ற சாதனையை, மாயா தனது 17 வயது 3 மாதங்களிலேயே முறியடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இத்துடன் நில்லாமல், இரட்டையர் பிரிவிலும் உக்ரைன் வீராங்கனை யெலிசவெட்டா கோட்லியாருடன் இணைந்து மற்றொரு கோப்பையை கைப்பற்றி இந்தியாவின் கொடியை உச்சிக்கு உயர்த்தியுள்ளார்.
 
எட்டாவது வயதில் தந்தையின் வழிகாட்டலில் கோயம்புத்தூரில் டென்னிஸ் விளையாட தொடங்கிய மாயா, ஸ்பெயினின் ரஃபா நடால் அகாடமியில் பயிற்சி பெற்று சர்வதேச அளவில் தனது திறமையை நிரூபித்துள்ளார். படிப்பையும் கடுமையான பயிற்சியையும் ஒருசேர சமாளித்து அவர் எட்டியுள்ள இந்த அசுர வளர்ச்சி, இந்திய டென்னிஸ் துறையின் எதிர்காலம் குறித்த புதிய நம்பிக்கையையும் பெருமையையும் தேடித்தந்துள்ளது.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
4வது டி20 போட்டியில் இந்தியா தோல்வி.. மே.இ.தீவின் கேப்டன் ஷாய் ஹோப் அபாரம்...