1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Ektaa R Kapoor Announces Sequel 'The Vvaan 2' Starring Sidharth Malhotra and Tamannaah Bhatia on Chhath Puja

நடிகை தமன்னா படத்தின் இரண்டாம் பாகம்.. பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பம்...

தி வான் 2
சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் தமன்னா பாட்டியா நடிப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற 'தி வான்' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த மகிழ்ச்சியான அறிவிப்பை தயாரிப்பாளர் ஏக்தா கபூர் வெளியிட்டுள்ளார். சாத் பூஜை திருநாளை முன்னிட்டு, 'தி வான் 2' திரைப்படம் உருவாகவுள்ளதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
 
கடந்த செப்டம்பர் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான முதல் பாகம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, அதன் அடுத்த பாகத்திற்கான அறிவிப்பு வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது. அதில் மக்கள் சாத் பூஜையை கொண்டாடும் காட்சிகளுடன், ஒரு சிறுமி வண்ணத்துப்பூச்சியைத் துரத்திச் செல்வதும், அவளை ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி பின்தொடர்வதும் போல காட்டப்பட்டுள்ளது. இறுதியில் அந்த சிறுமியின் கண்கள் சிவப்பாக மாறுவது முதல் பாகத்தின் உச்சக்கட்ட காட்சிகளை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது.
 
முன்னதாக, சாத் பூஜையை முன்னிட்டு நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா இப்படத்தில் பணியாற்றிய அனுபவத்தை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்திருந்தார். நாட்டுப்புற கதைகள் மற்றும் கலாச்சார பின்னணியில் உருவான இப்படத்திற்கு ரசிகர்கள் அளித்த வரவேற்பு சிறப்பானது என்று அவர் குறிப்பிட்டிருந்தார். தீபக் மிஸ்ரா இயக்கத்தில், அருணாப் குமார் கதையில், பாலாஜி மோஷன் பிக்சர்ஸ் மற்றும் டி.வி.எஃப்  நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
நான் என் கணவரை பிரியவில்லை - ரம்யா கிருஷ்ணன் விளக்கம்