வெள்ளி, 28 நவம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 26 ஆகஸ்ட் 2025 (11:14 IST)

ஓடிடியிலாவது எடுபடுமா விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’?... ஸ்ட்ரீமிங் தேதி இதுதான்!

ஓடிடியிலாவது எடுபடுமா விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’?... ஸ்ட்ரீமிங் தேதி இதுதான்!
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக மேலேறி வந்துகொண்டிருந்த விஜய் தேவரகொண்டா சமீபகாலமாக தொடர்ச்சியாக தோல்வி படங்களாகக் கொடுத்து வருகிறார்.  இந்நிலையில் அவர் நடிப்பில் உருவான ‘கிங்டம்’ திரைப்படம் ஆகஸ்ட்ர் 1 ஆம் தேதி பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸானது.

ஜெர்ஸி என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்த கௌதம் தின்னனூரி இயக்கத்தில் உருவான இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். ஆக்‌ஷன் கதைக்களத்தில் உருவான இந்த  இந்த படம் நேற்று ரிலீஸான நிலையில் ரிலீஸுக்குப் பிறகு கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. ஏற்கனவே பார்த்து சலித்துப்போன கதையை எடுத்து வைத்துள்ளதாக ரசிகர்கள் அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர். ரெட்ரோ மற்றும் சலார் போன்ற படங்களை நினைவூட்டுவதாக உள்ளதாகவும் சொல்லப்பட்டது.

இதனால் இந்த படம் மிகப்பெரிய அளவில் நஷ்டத்தை சந்தித்தது. இந்த படத்தின் தயாரிப்பாளர் நாக வம்சிக்கு 60 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் என சொல்லப்பட்டது. இந்நிலையில் ‘கிங்டம்’ படத்தின் ஸ்ட்ரீமிங் நாளை முதல் தொடங்கவுள்ளது. நெட்பிளிக்ஸ் தளத்தில் நாளை முதல் இந்த படம் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது.