சின்மயி வெர்ஷனா.. தீ வெர்ஷனா?... எது சிறப்பு?- தக் லைஃப் படத்தின் முத்த மழைப் பாடல் குறித்து ரசிகர்கள் விவாதம்!
மணிரத்னம் நடிப்பில் தக் லைஃப் படத்தை இயக்கி முடித்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக், அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.
கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் மணிரத்னம் ஆகிய மூவரும் இணைந்து தயாரிக்கின்றனர். படம் ஜூன் 5 ஆம் தேதி ரிலீஸாகிறது. சமீபத்தில் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் சென்னையில் நடந்தது. அதில் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் பாடகர்களால் மேடையில் பாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சின்மயி பாடிய முத்தமழை பாடல் பலரையும் வெகுவாகக் கவர்ந்தது. ஆனால் படத்தில் இடம்பெற்ற இந்த பாடலை பாடகி தீ பாடியுள்ளார். இந்நிலையில் ரசிகர்கள் இப்போது சின்மயி பாடிய வெர்ஷன் நன்றாக உள்ளதா அல்லது தீ பாடிய வெர்ஷன் சிறப்பாக உள்ளதா என விவாதிக்க தொடங்கியுள்ளனர். சின்மயி பாடலில் காதலும், காமமும் ததும்பி வழிவதாகவும், தீ பாடல் ஏக்கம் கலந்த தொனியில் உள்ளதாகவும் சொல்லப்படும் நிலையில் சின்மயி பாடலே சிறப்பாக உள்ளதாக பலரும் பாராட்டி வருகின்றனர்.