திங்கள், 16 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 25 நவம்பர் 2024 (08:17 IST)

ஸ்ரீதேவி எப்போதும் அழகு பற்றிய கவலைகளில் இருந்தார்… கணவர் போனி கபூர் மனம்திறப்பு!

இந்திய சினிமாவின் கிளாமர் குயினாக 80 களிலும் 90 களிலும் பிரபலமாக இருந்தவர் ஸ்ரீதேவி. தமிழ் சினிமாவில் ஆரம்பித்த அவரின் திரைவாழ்வு, இந்திக்கு சென்ற பின்னர் உச்சத்துக்கு சென்றது. அதன் பின்னர் பிரபல தயாரிப்பாளரான போனி கபூரின் இரண்டாவது மனைவியாக அவரை திருமனம் செய்துகொண்டார். அதன் பின்னர் மும்பையிலேயே செட்டில் ஆன அவருக்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என்ற இரு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் ஸ்ரீதேவி உறவினர் திருமணத்தில் பங்கேற்க துபாய் சென்ற போது அங்கு தங்கியிருந்த ஹோட்டல் அறையின் குளியல் தொட்டியில் தவரி விழுந்து 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி மரணமடைந்தார்.  இது இந்திய ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது.

இந்நிலையில் இப்போது ஸ்ரீதேவி குறித்து அவர் கணவர் போனி கபூர் தெரிவித்துள்ள தகவல் கவனம் பெற்றுள்ளது. அதில் “ஸ்ரீதேவி எப்போதும் தன்னுடைய தோற்றத்தில் அதீத கவனம் எடுத்துக்கொள்வார். எப்போதும் அழகாக இருக்கவேண்டும் என கவலைபட்டுக் கொண்டே இருப்பார். அதற்காக தனது உணவில் நிறைய கட்டுப்பாடுகளைப் போட்டுக்கொண்டார். அதனால் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவர் மேற்கொண்ட க்ரைஷ் முறை டயட்டால் ஷூட்டிங் ஸ்பாட்டில் மயங்கி விழுந்துள்ளார். அவருக்கு குறை ரத்த அழுத்த பிரச்சனையும் இருந்தது. அவர் எப்போதும் உப்பில்லாத உணவுகளையே சாப்பிட்டு வந்தார். ஹோட்டல்களுக்கு சென்றாலும் உப்பில்லாமல்தான் சாப்பிடுவார். அவரின் இந்த டயட்களால் அவர் உடல் போராடியது” எனக் கூறியுள்ளார்.