திங்கள், 16 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 30 அக்டோபர் 2024 (09:42 IST)

கங்குவா படத்தின் படத்தொகுப்பாளர் நிஷாத் யூசுப் திடீர் மரணம்..!

மலையாள சினிமாவில் வளர்ந்துவரும் படத்தொகுப்பாளராக உருவாகி வந்தவர் நிஷாத் யூசுப். இவர் படத்தொகுப்பு செய்த தள்ளுமாலா, உண்டா மற்றும் ஒன் ஆகிய படங்கள் அவரைப் பிரபலமாக்கின. இதன் மூலம் தற்போது மலையாளத்தில் பல முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் படங்களில் படத்தொகுப்பாளராகப் பணியாற்றி வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் தமிழிலும் கங்குவா படத்தின் மூலம் படத்தொகுப்பாளராக அறிமுகமாகியுள்ளார். மேலும் சூர்யாவின் 45 ஆவது படத்திலும் இவர்தான் படத்தொகுப்பாளராகக் கமிட்டாகியுள்ளார். இந்நிலையில் இன்று பின்னிரவு 2 மணியளவில் கொச்சினில் அவர் வசித்து வந்த அடுக்கு மாடி குடியிருப்பில் அவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

அவரின் மரணத்துக்கானக் காரணம் பற்றிய தகவல் எதுவும் வெளியாகவில்லை. அவரின் இந்த திடீர் மரணம் மலையாள மற்றும் தமிழ் சினிமா உலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.