திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 17 நவம்பர் 2024 (15:38 IST)

தலைமறைவாகவில்லை, படப்பிடிப்பில் தான் இருந்தேன்: கஸ்தூரி விளக்கம்.!

நடிகை கஸ்தூரி தலைமறைவாக இருந்ததாகவும், அவரை ஹைதராபாத்தில் சென்னை போலீசார் கைது செய்ததாகவும் தகவல் வெளியான நிலையில், கஸ்தூரி வெளியிட்டுள்ள வீடியோவில், தான் தலைமறைவாக இல்லை, ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்தேன் என்று கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 தெலுங்கு பேசும் மக்களை சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நடிகை கஸ்தூரி மீது வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், அவரது முன் ஜாமீன் மனு மதுரை உயர்நீதிமன்ற நீதிபதியால் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனை அடுத்து, அவரை கைது செய்ய போலீசார் தீவிரமாக இருந்த நிலையில், அவர் ஹைதராபாத்தில் உள்ள தயாரிப்பாளர் ஒருவர் வீட்டில் தலைமறைவாக இருந்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில், நேற்று மாலை சென்னை போலீசார் ஹைதராபாத்தில் நடிகை கஸ்தூரியை கைது செய்த நிலையில், இன்று சென்னைக்கு அழைத்து வந்தனர். இந்த நிலையில் நடிகை கஸ்தூரி வெளியிட்டுள்ள வீடியோவில், தான் தலைமறைவாக இல்லை என்றும், ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் தான் இருந்தேன் என்றும், என்னுடைய மொபைல்போனை என்னுடைய வழக்கறிஞருடன் கொடுத்து வைத்திருந்தேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு அளித்தேன் என்றும், தலைமறைவாக வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்றும், மீடியாக்கள் தான் அவ்வாறு செய்து எழுதியுள்ளன என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.


Edited by Siva