வியாழன், 6 நவம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Bala
Last Modified: புதன், 5 நவம்பர் 2025 (15:15 IST)

மீண்டும் வேசம் போடும் ரங்கராஜ் பாண்டே

மீண்டும் வேசம் போடும் ரங்கராஜ் பாண்டே
பிரபல செய்தி தொலைக்காட்சியில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர் ரங்கராஜ் பாண்டே. இவரது கேள்விக்கு என்ன பதில் நிகழ்ச்சி மிகபிரபலம். தமிழகத்தில் உள்ள பிரபலங்களை அழைத்து தனது கேள்விகளால் மடக்கி அவர்களை திக்குமுக்காடசெய்வது இவரது வழக்கம். பின்னர் தொலைக்கட்சியிலிருந்து திடீரென விலகி யூடியூப் சேனலை தற்போது நிர்வகித்து வருகிறார்.
 
ரங்கராஜ் பாண்டே அஜீத் நடித்த நேர்கொண்ட பார்வை படம் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார். அந்த படத்தில் அவரது வேடம் நல்ல பெயரை பெற்றுதந்தது. ஆனாலும் எனோ தொடர்ந்து சினிமாவில் நடிக்கவில்லை.
 
இந்த நிலையில் மீண்டும் தற்போது ஒரு படத்தில் நடிக்கிறார். தமிழகத்தை உலுக்கிய லட்சுமிகாந்தன் கொலைவழக்கு சம்பவத்தை மையமாக கொண்டு தயாராகி வரும் லட்சுமிகாந்தன் கொலைவழக்கு என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தை  தயாள் பத்மநாபன் என்ற இயக்குனர் இயக்குகிறார். சமீபத்தில் கர்நாடக அரசு சிறந்த இயக்குனருக்கான விருதினை பெற்றார் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.