10 ஆண்டுகளுக்குப் பிறகு தெலுங்கு சினிமாவில் ஏ ஆர் ரஹ்மான்… ‘பெட்டி’ முதல் சிங்கிள் அப்டேட்!
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ராம்சரண் நடிப்பில் சமீபத்தில் அவர் ஷங்கர் இயக்கத்தில் கேம்சேஞ்சர் படம் ஜனவரி 10 ஆம் தேதி ரிலீஸாகி மிகப்பெரிய தோல்விப் படமாக அமைந்தது. இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளர் தில் ராஜு 100 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் அடைந்ததாக சொல்லப்பட்டது.
இதையடுத்து ராம்சரண், தற்போது உப்பென்னா படத்தின் இயக்குனர் புச்சிபாபு சனா இயக்கத்தில் பெட்டி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ஜான்வி கபூர் இணைந்துள்ளார். இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். ரத்தினவேல் ஒளிப்பதிவு செய்கிறார். தற்போது ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் முதல் தனிப்பாடல் இன்று காலை 11.07 மணிக்கு வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஏ ஆர் ரஹ்மான் நேரடியாக ஒரு தெலுங்குப் படத்துக்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக அவர் 2016 ஆம் ஆண்டு வெளியான சாகசம் ஸ்வாசக சகிபோ என்ற படத்துக்கு இசையமைத்திருந்தார்.