வியாழன், 12 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 31 ஆகஸ்ட் 2024 (12:04 IST)

கேரவனில் ரகசிய கேமரா வைத்து நடிகைகளின் நிர்வாணக் காட்சிகளை பார்க்கிறார்கள்… ராதிகா பகிர்ந்த அதிர்ச்சி தகவல்

மலையாளத் திரை உலகில் பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான நிலையில் பல முன்னணி நடிகர்கள் மீதான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால்  உள்பட மலையாள நடிகர் சங்கம் கூண்டோடு கலைந்து விட்டதாகவும் அனைத்து நிர்வாகிகளும் ராஜினாமா செய்து விட்டதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக மலையாள சினிமா மிகவும் ஆரோக்யமாகவும், கலாரீதியாகவும் பல படங்களைக் கொடுத்து வருவதாகப் பாராட்டுகள் குவிந்து வந்தன. ஆனால் இப்படி ஒரு செய்தி வெளியாகி அந்த திரையுலகின் கொடூர முகத்தை தோளுரித்துக் காட்டியுள்ளது. இது சம்மந்தமாக பல நடிகைகள் அதிர்ச்சிகரமான தகவல்களைப் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை ராதிகா பகிர்ந்துள்ள தகவல் கவனம் ஈர்த்துள்ளது.

அதில் “நடிகைகளின் கேரவனில் ரகசியக் கேமராக்களைப் பொருத்தி அவர்களின் நிர்வாணக் காட்சிகளை படமாக்குகிறார்கள். அதனை நடிகர்கள் படப்பிடிப்புத் தளத்தில் அமர்ந்து ஒன்றாகப் பார்த்து ரசிப்பதைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். அதனால்தான் நான் ஹோட்டலில் தங்கி ஆடையை மாற்றிக் கொண்டேன்.’ என ராதிகா கூறியிருப்பது மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது.