திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 29 ஆகஸ்ட் 2024 (16:55 IST)

ஜெகன் மோகன் ரெட்டி கட்சியின் 2 எம்பிக்கள் ராஜினாமா.. தெலுங்கு தேச கட்சியில் இணைப்பா?

ஜெகன் மோகன் ரெட்டி கட்சியின்  இரண்டு எம்பிக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளதை அடுத்து அவர்கள் இருவரும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சியில் இணையலாம் என்று கூறப்படுகிறது.

ஜெகன் மோகன் ரெட்டி காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்கள் கோபி தேவி வெங்கட்ராமன் ராவ் மற்றும் பீடா மஸ்தான் ஆகிய இருவரும் இன்று தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இருவரும் தங்கள் ராஜினாமா கடிதங்களை மாநிலங்களவைத் தலைவர் தலைவருக்கு அனுப்பி உள்ளனர்.

இவர்கள் இருவரும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச  கட்சியில்   இணைய இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த  சில நாட்களுக்கு முன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு  நாயுடுவை வெங்கட்ராமன் ராவ் மற்றும் மஸ்தான் ஆகிய இருவரும் சந்தித்ததாக கூறப்படும் நிலையில் தற்போது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகவுள்ளனர்.

சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததை அடுத்து ஏற்கனவே பல தலைவர்கள் அக்கட்சியில் இருந்து விலகிய நிலையில் தற்போது மேலும் இரண்டு பேர் விலக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva