வியாழன், 12 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 12 டிசம்பர் 2024 (14:34 IST)

சிறப்பாக நடந்து முடிந்த கீர்த்தி சுரேஷ் திருமணம்! - வைரலாகும் புகைப்படங்கள்!

Keerthy Suresh Marriage

பிரபல நடிகையான கீர்த்தி சுரேஷின் திருமணம் இன்று கோவாவில் நடந்த நிலையில் அதன் புகைப்படங்களை அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். 

 

 

தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் பிரபலமான நடிகையாக வலம் வந்த கீர்த்தி சுரேஷ், தற்போது பேபி ஜான் படம் மூலமாக இந்தியிலும் கால் பதித்துள்ளார். பல நடிகைகளும் புகழின் உச்சத்தில் இருக்கும்போது திருமணம் செய்ய யோசிக்கும் நிலையில், தனது 15 வருட காதலனான ஆண்டனியை கரம் பிடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

 

இவர்களது திருமணம் இன்று காலை இந்து முறைப்படியும், மாலை கிறிஸ்தவ முறைப்படியும் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் காலை இந்து முறைப்படி சொந்தங்கள் சூழ நடந்த திருமணத்தின் புகைப்படத்தை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

 

இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், கீர்த்தி சுரேஷ்க்கு ரசிகர்கள் திருமண வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

 

Edit by Prasanth.K