வியாழன், 12 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 24 நவம்பர் 2024 (13:54 IST)

என்ன கீர்த்திம்மா இதெல்லாம்..? பாலிவுட்டுக்கு மட்டும் இவ்ளோ தாராளமா? - Unlimited க்ளாமரை கட்டவிழ்த்த கீர்த்தி சுரேஷ்!

Baby John Keerthy suresh

இந்தி சினிமாவில் பேபி ஜான் படத்தின் மூலம் அறிமுகமாகும் கீர்த்தி சுரேஷ் அதில் ஒரு பாடலுக்கு க்ளாமராக டான்ஸ் ஆடியுள்ளது வைரலாகியுள்ளது.

 

 

தமிழில் அட்லீ இயக்கத்தில், விஜய் நடித்து வெளியாகி பெரும் ஹிட் அடித்த படம் ‘தெறி’. அந்த படத்தை தற்போது அட்லீ தயாரிக்க இந்தியில் கலீஸ் இயக்குகிறார். இந்த படத்தில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ், ஜாக்கி ஷ்ரப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் வைரலானது.

 

இந்நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிளான ’நெய்ன் மடாக்கா’ என்ற பாடலின் டீசர் சமீபத்தில் வெளியானது. இதில் கீர்த்தி சுரேஷ் க்ளாமர் ட்ரெஸ்ஸில் போடும் டான்ஸ் அசைவுகள் ரசிகர்களை சொக்க வைத்துள்ளது. தற்போது இந்த பாடலின் டீசரை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வரும் ரசிகர்கள், கீர்த்தி சுரேஷ் தமிழ் உள்ளிட்ட படங்களில் நடிக்கும்போது க்ளாமரை தவிர்ப்பதாகவும், ஆனால் இதுவே தெலுங்கு, இந்தி என வந்துவிட்டால் அன்லிமிடென் க்ளாமர் காட்டுவதாகவும் பேசிக் கொள்கின்றனர்.

 

Edit by Prasanth.K