1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 9 மே 2025 (14:06 IST)

பாக்கி இல்லாமல் பாக்கிஸ்தான் சீர்குலைக்கப் படலாம்: இயக்குனர் பார்த்திபன்

இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகளை பல பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர்.   அந்த வகையில் இயக்குனர் பார்த்திபன் இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கூறி இருப்பதாவது:
 
பாக்கி இல்லாமல் 
பாக்கிஸ்தான் சீர்குலைக்கப் படலாம் -இந்தியாவின் 
பழிக்குப் பழி படலத்தில்
பதுங்குக் குழியில் பாக். பிரதமர்
ஒதுங்கி ஓரோரமாய் குந்திகினு இருப்பதாக ஒரு தகவல்.
 
போர் முறையுடன் அனுகும் நம் இந்தியாவை எதிர்கொள்ள இயலாத பாக், நம்  பொதுமக்களுக்கு சேதம் விளைவிக்கும் வன்முறை தாக்குதலில் ஈடுபடுகிறது அதை நம் வான்வெளி அதிரடி yes!
 
S -400 வானிலேயே சுட்டு வீழ்த்தி (காறி துப்பியது போல்) நெருப்பு எச்சிலாய் தரையில் வீழ்த்துவதை மொபைல் திரையில் பார்க்கும் போதே பரவசம் ஆகிறது. 
ஆயினும்
ஆயினும்
உலக நாடுகள் ஒன்றினைந்நு பாக் அராஜகத்திற்கு தீர்வு சொல்லி மக்களின் அமைதியை உறுதி செய்ய வேண்டும்!
 
Edited by Mahendran