வியாழன், 20 நவம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: திங்கள், 26 மே 2025 (17:11 IST)

டிரைலரே இவ்வளவு கேவலமா இருக்குது: வனிதா விஜயகுமாரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

டிரைலரே இவ்வளவு கேவலமா இருக்குது: வனிதா விஜயகுமாரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!
வனிதா விஜயகுமார் நடித்த, இயக்கிய மிஸஸ் அண்ட் மிஸ்டர் என்ற திரைப்படம் அடுத்த மாதம் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில், இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
 
நடுத்தர வயது சேர்ந்த ஒரு பெண் திருமணம் செய்யாமல் குழந்தை பெற்றுக் கொள்வதா, அல்லது திருமணம் செய்து குழந்தை பெற்றுக்கொள்வதா என்ற குழப்பத்திற்கான விடை தான் இந்த படத்தின் கதை என்று டிரைலரில் இருந்து தெரிய வருகிறது.
 
வனிதா விஜயகுமார் மற்றும் ராபர்ட் ஆகிய இருவரும் பேசும் வசனங்கள் இரட்டை அர்த்த வசனங்கள்  கொச்சையாக இருப்பதாக நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
 
ஷகிலா, பவர் ஸ்டார் சீனிவாசன் உள்பட அனைவரும் நகைச்சுவை என்ற பெயரில்,  கர்ண கொடூரமாக நடித்துள்ளார்கள் என்றும், டிரைலரை கூட பார்க்க  முடியவில்லை, இந்த படத்தை எப்படி தான் பார்ப்பது என்றும் நெட்டிசன்கள் கூறுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இருப்பினும், வனிதாவின் வித்தியாசமான முயற்சி தான் இந்த படம் என்றும், அவரது கடின உழைப்பிற்கு நிச்சயம் பலன் கிடைக்கும் என்றும் சில ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Siva