கார்த்தியின் ‘வா வாத்தியார்’ படம் எப்பதான் ரிலீஸ் ஆகும்?,.. பணிகளை முடுக்கிவிடும் படக்குழு!
மெய்யழகன் படத்துக்குப் பிறகு நடிகர் கார்த்தி நலன் குமாரசாமி இயக்கத்தில் வா வாத்தியார் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சத்யராஜ், ராஜ்கிரண் மற்றும் க்ரீத்தி ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.
நீண்டகாலமாக இந்த படம் பற்றி எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. ஆனால் அதன் பிறகு ரிலீஸ் பற்றி எந்த அப்டேட்டும் இல்லை. இந்நிலையில் இந்த படத்துக்காக இன்னும் 20 நாட்கள் ஷூட் நடத்த வேண்டும் என இயக்குனர் நலன் குமாரசாமி அடம்பிடிக்கிறாராம்.
விரைவில் கடைசிகட்ட படப்பிடிப்பு நடக்கவுள்ள நிலையில் ஜூலை மாதத்தில் படம் ரிலீஸாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அதையொட்டி ஜூன் மாதத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. கங்குவா தோல்வியால் பின்னடைவை சந்தித்திருக்கும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இந்த படத்தின் மூலம் கம்பேக் கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.