1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 28 மே 2025 (09:44 IST)

சித்தப்பு நீங்க எப்ப வந்தீங்க? வந்ததே தெரியாமல் டாடா சொல்லும் கத்தரி வெயில்!

Sun

இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் தொடங்கியபோது வெயிலின் தாக்கம் தெரியாத நிலையில் இன்றுடன் விடைபெறுகிறது.

 

ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். தமிழ் நாட்காட்டியில் அக்னி நட்சத்திரம் தொடங்கும் காலம் கோடைக்காலத்தின் உச்ச வெயில் காலமாக அமைகிறது. அந்த வகையில் மே 4ம் தேதி தொடங்கும் அக்னி நட்சத்திரம் மே 28ம் தேதி வரை நீடிக்கும் என கூறப்பட்டது. இதை கத்தரி வெயில் காலம் என்றும் அழைப்பர்.

 

கடந்த ஆண்டுகளில் கத்தரி வெயில் காலத்தில் உஷ்ணம் அதிகமாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டில் நேர்மாறாக அக்னி நட்சத்திரத்திற்கான மரியாதையே இல்லாமல் மழை பல இடங்களிலும் வெளுத்து வாங்கியது. கோடை மழை வழக்கத்தை விட அதிகமாக பெய்ததால் பல மாவட்டங்களிலும் வெயில் தெரியாத அளவு மிதமான வெப்பநிலையே நிலவியது. 

 

மே இறுதி வாரங்களுக்கும் சரியாக தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கிவிட்டதால் அப்போதும் உச்சப்பட்ச வெயில் உணரப்படவில்லை. கடந்த ஆண்டுகளில் எப்போது கத்தரி வெயில் காலம் முடியும் என்ற நிலையில் இருந்த மக்கள், இந்த ஆண்டோ “சித்தப்பு நீங்க எப்போ வந்தீங்க?” என்று அக்னி நட்சத்திரத்தை கிண்டல் செய்து வருகின்றனர். இன்றுடன் அக்னி நட்சத்திரம் முடியும் நிலையில் வந்ததே தெரியமல் திரும்ப செல்கிறது. 

 

Edit by Prasanth.K