1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 24 மே 2025 (08:03 IST)

எனது போலி ஆபாச வீடியோவை டவுன்லோட் செய்தால்…? - நடிகை கிரண் எச்சரிக்கை!

பிரபல நடிகையான கிரண் தனது மார்பிங் வீடியோ இணையதளத்தில் பரவி வருவதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 

தமிழ் சினிமாவில் 2000களில் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை கிரண். ஜெமினி, வின்னர், தென்னவன் என்று பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்த கிரண், மார்க்கெட் குறைந்த பின்னர் ஆம்பள, முத்தின கத்தரிக்காய் உள்ளிட்ட படங்களில் துணை கதாப்பாத்திரங்கள் ஏற்று நடித்தார்.

 

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக உள்ள கிரண், சில ஆண்டுகள் முன்னதாக சப்ஸ்க்ரைபர் ஒன்லி ப்ளான்களையும் அறிமுகம் செய்தார். அவருடைய எக்ஸ்க்ளுசிவ் புகைப்படங்கள், வீடியோ சாட்டிற்கு பெரும் அளவு கட்டணத்தை வசூலித்தார்.

 

இந்நிலையில் தற்போது நடிகை கிரண் சைபர் க்ரைம் போலீஸில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் ஹனது மார்பிங் செய்யப்பட்ட போலி ஆபாச வீடியோக்களை சிலர் தயாரித்து இணையத்தில் பரப்பி வருவதாகவும், அதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்துள்ளார். மேலும் தனது போலி ஆபாச வீடியோவை டவுன்லோட் மற்றும் ஷேர் செய்பவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

 

Edit by Prasanth.K