1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 18 ஜூலை 2025 (14:28 IST)

600 க்கும் மேற்பட்ட ஸ்டண்ட் நடிகர்களுக்கு காப்பீடு எடுத்துக் கொடுத்த அக்‌ஷய் குமார்!

சில நாட்களுக்கு முன்னர் பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா மற்றும் தினேஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் ‘வேட்டுவம்’ படத்தின் ஸ்டண்ட் காட்சியின் போது ஸ்டண்ட் கலைஞர் மோகன் ராஜன் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இது தமிழ் திரையுலகில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஸ்டண்ட் கலைஞர்களின் தொழில் உயிருக்கு உத்ரவாதம் மிகவும் குறைவாக இருப்பதால் அவர்களுக்கான காப்பீடு எடுப்பதில் சிக்கல்கள் உள்ளன. இந்நிலையில்  இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் 650 க்கும் மேற்பட்ட ஸ்டண்ட் கலைஞர்களுக்கு உடல்நலம் மற்றும் விபத்துக் காப்பீடு எடுத்துக் கொடுத்துள்ளார்.

இதன் மூலம் ஒரு ஸ்டண்ட் கலைஞர் படப்பிடிப்புத் தளத்திலோ அல்லது படப்பிடிப்புத் தளத்துக்கு வெளியிலோ காயமடைந்தால் அவர் 5 லட்சம் ரூபாய் வரை இலவசமாக சிகிச்சை எடுத்துக் கொள்ள முடியும். இது ஸ்டண்ட் கலைஞர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என அக்‌ஷய் குமாருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.