தோனியின் காலில் விழுந்து ஆசி பெற்ற 14 வயது வைபவ் சூரியவம்சி.. அதுதான் தல..!
ராஜஸ்தான் அணியில் இடம் பெற்று, கிரிக்கெட் ஆர்வலர்கள் அனைவரின் கவனத்தையும் பெற்ற வைபவ் சூர்யவம்சி, நேற்றைய போட்டி முடிந்ததும் தோனியின் காலில் விழுந்து ஆசி பெற்ற புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தோனியை மானசீக குருவாக ஏற்காத கிரிக்கெட் வீரர்கள் இல்லை என்றும் கூறலாம். அந்த வகையில், 14 வயது சூர்யவம்சி, நேற்றைய சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி முடிந்ததும், வீரர்கள் ஒருவருடன் ஒருவர் கைகுலுக்கிக் கொண்ட நிகழ்வு நடந்தபோது, தோனி கைகுலுக்க வந்தார். அப்போது சூர்யவம்சி, அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார்.
இதனைத் தொடர்ந்து, தோனி அவரை தூக்கி, தோளின் மீது கை வைத்து ஆசி வழங்கினார். சூர்யவம்சிக்கு தோனி ஒரு தந்தை மாதிரி மட்டுமல்லாது, குருவாகவும் இருக்கிறார் என்பதும், அவர் மீது மிகுந்த மரியாதை கொண்டவர்களில் ஒருவராக இருக்கிறார் என்பதும் இதன் மூலம் தெரிகிறது.
இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.
Edited by Siva