1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 21 மே 2025 (10:31 IST)

ப்ளே ஆஃப் போவது யார்? மும்பை இந்தியன்ஸா? டெல்லி கேப்பிட்டல்ஸா? - கத்திமுனை யுத்தம் இன்று!

MI vs DC

பரபரப்பான ஐபிஎல் சீசன் ப்ளே ஆஃபை நெருங்கியுள்ள நிலையில் இன்று நடைபெறும் MI vs DC போட்டி கத்திமுனை போட்டியாக அமைந்துள்ளது.

 

நடப்பு ஐபிஎல் சீசன் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடந்து வரும் நிலையில் குஜராத் டைட்டன்ஸ், ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் ஆகிய 3 அணிகளும் ப்ளே ஆப் தகுதி பெற்றுவிட்டன. எஞ்சிய அணிகளில் இன்னும் ஒரு அணி மட்டுமே ப்ளே ஆப்க்குள் நுழைய முடியும் என்ற நிலையில் அந்த ஒரு இடத்திற்காக டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே இன்று போட்டி நடைபெறுகிறது.

 

இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறது என்பதை பொறுத்து ப்ளே ஆப்க்கு தகுதி பெற முடியும். தற்போது டெல்லி அணி 13 புள்ளிகளுடன் 5வது இடத்திலும், மும்பை அணி 14 புள்ளிகளுடன் 4வது இடத்திலும் உள்ளது. இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெற்றாலும் அடுத்த போட்டியில் பஞ்சாப் அணியையும் எதிர்கொண்டு வென்றாக வேண்டும்.

 

ஒருவேளை மும்பை இந்தியன்ஸ் இந்த போட்டியில் வென்றால் 16 புள்ளிகளை பெறும். இதில் வெற்றியை தவறவிட்டு டெல்லி அணி அடுத்த போட்டியில் பஞ்சாபை வென்றாலும் கூட 15 புள்ளிகளே கிடைத்து ப்ளே ஆப் வாய்ப்பை தவறவிடும். மும்பை அணி இந்த போட்டியில் தோற்றாலும் பஞ்சாப் அணியுடனான மேட்ச்சில் வென்றால் ப்ளே ஆப் செல்ல வாய்ப்பிருக்கும். ஆனால் டெல்லி அணி பஞ்சாப் போட்டியில் தோற்க வேண்டும்.

 

இப்படியான கத்திமுனை தருணத்தில் இந்த போட்டி நடைபெறுவதால் இன்றைய போட்டிதான் இரு அணிகளுக்கும் இருக்கும் கடைசி வாய்ப்பாக உள்ளது.

 

Edit by Prasanth.K