வெள்ளி, 28 நவம்பர் 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 8 செப்டம்பர் 2025 (15:36 IST)

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்ஸியில் ஸ்பான்சர் பெயர்கள் இல்லை! என்ன காரணம்?

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்ஸியில் ஸ்பான்சர் பெயர்கள் இல்லை! என்ன காரணம்?
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணியின் புதிய ஜெர்ஸியில் எந்தவொரு ஸ்பான்சர் பெயரும் இடம்பெறவில்லை. இதற்கு முக்கிய காரணமாக, ஆன்லைன் விளையாட்டு நிறுவனமான 'ட்ரீம் 11'  தனது ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தை ரத்து செய்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பணம் செலுத்தி விளையாடப்படும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டதால், ட்ரீம் 11 நிறுவனம் தனது ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்திலிருந்து விலகி கொண்டது.
 
இந்த திடீர் விலகலால், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் குறுகிய காலத்தில் புதிய ஸ்பான்சருடன் ஒப்பந்தம் செய்ய முடியவில்லை. எனவே, ஆசிய கோப்பை போட்டிகளில் இந்திய அணி ஸ்பான்சர் இல்லாமல் களமிறங்குகிறது.
 
இது, இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அசாதாரண நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் இந்த புதிய ஜெர்ஸி குறித்து ரசிகர்கள் மத்தியில் கலவையான கருத்துக்கள் நிலவி வருகின்றன.
 
Edited by Mahendran