வெள்ளி, 28 நவம்பர் 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 22 ஆகஸ்ட் 2025 (12:17 IST)

சஞ்சு சாம்சனுக்கு பேட்டிங்கில் எந்த இடம்? குழப்பத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்..!

சஞ்சு சாம்சனுக்கு பேட்டிங்கில் எந்த இடம்? குழப்பத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்..!
சுப்மன் கில் ஆசிய கோப்பைக்கான துணை கேப்டனாக நியமிக்கப்பட்ட நிலையில், சாம்சனின் பேட்டிங் நிலைப்பாடு குறித்த விவாதங்கள் அதிக அளவில் எழுந்துள்ளன. சாம்சன் தனக்கு பிடித்தமான பேட்டிங் இடத்தை வினோப் மனோகரன் மற்றும் ஜோபின் ஜோபி ஆகியோருக்கு விட்டுக்கொடுத்து, மத்திய வரிசையில் விளையாடினார். இது, அவரது ரசிகர்கள் மத்தியில் புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில், திலக் வர்மா 3-வது இடத்திலும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் 4-வது இடத்திலும் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொரு தொடக்க ஆட்டக்காரராக அபிஷேக் சர்மா உறுதியாகியுள்ள நிலையில், இரண்டாவது தொடக்க ஆட்டக்காரர் இடத்திற்கு பலத்த போட்டி நிலவுகிறது. இங்கிலாந்து தொடரில் அபாரமாக விளையாடியதன் மூலம் சுப்மன் கில், தனக்கான இடத்தை உறுதிப்படுத்திக் கொண்டுள்ளார்.
 
இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின்,  "சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்ட பிறகு, சஞ்சு சாம்சனின் இடம் கேள்விக்குறியாகியுள்ளது. கில் அணியில் இடம்பிடிப்பது உறுதியானதால், சஞ்சு சாம்சனின் வாய்ப்பு குறைவு. கில்லை அணியில் சேர்த்தால், அவர் 3-ஆம் இடத்தில் விளையாட வேண்டியிருக்கும். சஞ்சு தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்க வாய்ப்பு இருந்தாலும், அதுவும் நடக்காது" என்று தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran